மன்னர் காலங்களில், குறிப்புகளையும், முக்கிய நிகழ்வுகளையும் செப்பேடுகளில் பதிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இது அடுத்து வரும் தலைமுறையினருக்கு பயன்படும் விதத்தில் பாதுகாக்கப்பட்டது. நாம் செய்யவிருப்பது, பன்னிரெண்டு திருமுறைகளையும் செப்பேடுகளில் பதித்து, இருபத்தைந்து தகடுகள் கொண்ட புத்தகமாக, 155 புத்தகங்கள் வடிவமைத்தல். இதை செய்து முடிக்க நான்கு டன் செப்பு…