அறக்கட்டளை

திருச்சிற்றம்பலம்
 

திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா(கு) ஆகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்

 

தவமுடைய திருவுடையீர்,

எல்லாம் வல்ல ஞானக்கூத்தப் பெருமான் திருவருள் துணையுடன் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை கடலூர் மாவட்டம். விருத்தாசலத்தில் 2001ல் தொடங்கப் பெற்று அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் அவரவர் அவதாரத் திருத்தலங்களில் திருக்கோயில் அமைக்கப்பட்டு வருடாந்திர விழாவும், குருபூஜை விழாவும் அந்தத் தலங்களில் உள்ள பொதுமக்களையும் ஆற்றுப்படுத்தி விழா நிறைவாக பெருமான் கருணையால் இன்றளவும் நடைபெற்று வருகிறது, அறுபத்து மூன்று நாயன்மார்களில் மன்னர்கள் காலத்தில் 21 நாயன்மார்களுக்கு தனி சந்நதி அமைத்து சிறப்பாக வழிபாடு நடைபெற்று வருகிறது.

அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மூலம் 19 நாயன்மார்களுக்கு திருவருளே முன்னின்று திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்து வழிபாடாற்ற சிறப்புப் பெற்றுள்ளது.

5 நாயன்மார்களின் அவதாரத்தலம் வெளி மாநிலத்தில் உள்ளது, தற்போது மூன்று நாயன்மார்களுக்கு திருக்கோயில் அமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாயன்மார்கள் அவதாரத் தலங்களில் திருக்கோயில் அமைக்கும் முயற்சியில் திருவருளையே எண்ணி சிந்தித்து உள்ளோம்.

பெரும்பான்மையான திருக்கோயில்களில் அறுபத்துமூவர் சந்நதிகள் உள்ளன. நாயன்மார்கள் அவதாரத் தலங்களில் நாயன்மார்களுக்கு என்று எந்த ஒரு சிறு குறிப்பும், அடையாளமும் காணப்படவில்லை. அதன் பொருட்டு சைவ உலகம் நாளைய சமய உலகம் ஏற்றி போற்றி கொள்ளவும், சமயம் மேலும் மேலும் சிறந்து விளங்கவும், இத்திருப்பணியை  சைவ உலக அடியார் பெருமக்களுடைய பெரும் பொருள் உதவிப் பெற்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 2008ல் அடியவர் அறுபத்துமூவர் அருள்ஞான உலா ரதயாத்திரை நாயன்மார்கள் அவதாரத்தலம், முக்தித்தலம் சென்று தமிழகத்தில் அவதாரத் தலங்களில் பெரும் சிறப்புப் பெற்று இறைவன் திருவருள் நிலைத்தது,  சிதம்பரத்தில் ரதயாத்திரை தொடங்கி குன்றத்தூரில் அறுபத்து மூன்றாம் நாள் தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு ஆடவல்லானும் அறுபத்துமூவர் முன்னின்று கும்பாபிஷேகம் செய்து ரத யாத்திரை நிறைவு பெற்றது.

பெருமான் திருவருளுடன் 2010ல் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மூலம் திருஆப்பாடியில் அறுபத்து மூவர் திருக்கோயில் பொன்னம்பல வடிவில் அமைக்கப்பெற்றது, தொடர்ந்து திருவருளையும் அடியார் பெருமக்களையும், அன்பர்களையும் வணங்கி நாளைய உலகம் உணர்ந்து ஓதற்கரிய பெரும் சிறப்பு பெற பன்னிரு திருமுறைகளையும் செப்பேட்டில் பதித்து செப்பறைத் திருமுறைத் திருக்கோயில் அமைக்கும் பெரும் முயற்சியில் இவ்வறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

பன்னிரு திருமுறைகளையும் செப்பேட்டில் பதித்து சிவலிங்க வடிவத்தில் திருமுறைக் கருவறை அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு செப்புத் தகடும் ஒரு கிலோ கொண்டதாகும். 20 செப்புத்தகடுகளை கொண்டது ஒரு புத்தகம். ஒரு புத்தகத்தின்  மேல் அட்டை 2 கிலோ, கீழ் அட்டை 2 கிலோ, சைடு லாக் 1 கிலோ, ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்தஎடை 25 கிலோ ஆகும், திருமுறைகள் அருளாளர்கள் அருளப்பெற்ற காலம் முதல் காலங்கள் தோறும் மேலும் மேலும் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளது போலவே நாமும் நம் காலமும் செய்த தவப்பயன் காரணமாகவே திருமுறைகள் திருமேனி வடிவு பெற்று சிறக்கவுள்ளது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை, ஆஸ்திரேலியா அனைத்து அயல்நாட்டில் வாழ் அடியார் பெருமக்கள் ஆங்காங்கு நடைபெறும் திருமுறை விழாக்களிலும், திருமுறை மாநாடுகளிலும், இல்லங்கள் தோறும் நடைபெறும் திருமுறை வழிபாடுகளிலும் திருமுறை செப்பேட்டுத் திருப்பணியை எடுத்து அன்பர் பெருமக்களிடம் விளக்கியும், இத்திருப்பணிக்கு பெரும் பொருள் மற்றும் நிதி அளித்து அனைத்துலகமும் சைவத்திருமுறைகள் வழியில் செல்ல அனைத்து அடியார்களும் இத்திருப்பணி நிறைவு பெற ஞானக்கூத்தன் திருவடியை சிந்திப்போமாக.

 

 

Construction of Thirumurai Temple
Engraving of Thirumurai in Copper Plates
 

The Thirumurai comprises of 12 volumes of Holy Tamil Hymns sung by saivaite saints of Tamil Nadu (Saivaites are the followers of Saivism which is a section of Hinduism.

All religions in the world have scriptures of their own and these scriptures are worshipped with due reverence by the respective religions.

However the Tamil Thirumurai is unique, in that it contains tottirams and sattirams.

Tottirams are melodious hymns that sing the praise of Lord Shiva and constitute the Bakthi literature cattirams are the works which explain the Saiva Siddhantha or the Saiva philosophy. They constitute the philosophical literature.

Thus the saivism of Tamilnadu has both, the soul stirring hymns and the soul searching philosophy, thus leading to realization.

Generally in Hinduism and specifically in Saiva Siddantha it is acclaimed that the soul undergoes rebirth. It is strongly believed that the sins committed in the past births are the root cause of all the pleasure and the pain in the present.

Fervently receiting the Thirumurai with true devotion and dedication  will pave the way for eternal bliss. This is the only way to attain the sacred feet of Lord Siva and thereby cease to be a part of the cycle of birth and rebirth.

Thirumurai is auspiciously considered as “Siva Vaaku” – Sacred utterances by Lord Siva himself. Hence it is Worshipped with regard and reverence throughout Tamilnadu in all the temples and mutts.

The thirumurai has to be secured for posterity and the tradition of singing the hymns has to be handed down to the generations to come.

In view of this earnest desire, a temple for Thirumurai becomes essential and need of the hour. This will enhance the perspective of the public at large to understand the greatness of our tradition and Thirumurai.

It is with this sole intention that we propose to construct a Thirumurai temple. Here will be consecrated and housed the 12 volumes of the great Thirumurai, all of which engraved in copper plates.

These will be considered as manifestation of Siva himself as Lingam which depicts form, formless and form/formless. Such a profound truth represented by a simple form.

The copper plates not only make a permanent impression of the Thirumurai but also absorb the cosmic radiation of the universe, which in turn will influence the human bodies praying in proximity. Thus there is harmony for the body and soul.

 

“All public , Devotees and philanthropists are earnestly requested to participate in this sacred endeavour”
 

 

திருச்சிற்றம்பலம்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் !