இத்திருக்கோயிலானது
சைவ சமய உலகத்தில் சிறப்பாக என்றென்றும் விளங்கி அருள்பாலித்து வருகின்ற பெருமானுடைய தாமிர சபை வடிவில் திருமுறைக் கருவறை அமைக்கப்பட்டு கீழ்த்தளத்திலிருந்து கோபுரக்கலசம் வரை திருமுறை திருக்கோயில் முழுமையாக செப்புக் கவசம் இடுதல் வேண்டும். மூலவராக பன்னிரு திருமுறைகளையும் திருச்சன்னதியுள் செப்பேடுகளாக எழுந்தருளச் செய்து கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திருஎருக்கத்தம்புலியூர் (எ) இராஜேந்திரப்பட்டிணம் திருத்தலத்தில் அருள்மிகு திருக்குமார சுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் எம்பிரான் திருநீலகண்ட யாழ்பாண நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 17.03.2006 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது, அழைப்பிதழ்கள் கோயில் திருப்பணி…

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் வட்டம், சேய்ஞலூர் (எ) சேங்கனூர் திருத்தலத்தில் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் எம்பிரான் சண்டேஸ்வர நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 12.07.2006 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது, அழைப்பிதழ்கள் புதிய சன்னிதி எழுப்புதல்…

நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், திருப்புன்கூர் அஞ்சல், திருப்பெருமங்கலம் திருத்தலத்தில் அருள்மிகு வன்றொண்டரீசர் திருக்கோயில் எம்பிரான் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 09.02.2007 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது அழைப்பிதழ்கள் திருக்கோயில் தோற்றம் கும்பாபிஷேகம்