திருச்சிற்றம்பலம்

உலகெலாம்

சிவாய நம

திருக்கோயிலின் சிறப்பு

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய பன்னிருத் திருமுறைகளையும் ஞானக்கூத்தன் திருவருளால் செப்பேட்டில் எழுந்தருளப் பெற்று அமைய உள்ள உலகின் முதல் திருமுறைத் திருக்கோயில் ஆகும். திருமுறைகள் அருளப்பெற்ற காலங்கள் முதல் காலங்கள் தோறும் மேலும் மேலும் சிறப்புப் பெற்று விளங்கி மிளிர்கின்றன.

testi3

திருமுறை மந்திரச் சொற்களை செப்பு யந்திரத்தில் பதித்து நித்தியப்படி பாராயணம் செய்து வழிபாடு செய்வதால் பல்லாயிரக்கோடி கணக்கிலான அதிர்வலைகளை (Vibration) நொடிப்பொழுதில் நாம் அனைவரும் உணரலாம். உலகெலாம் உள்ள அனைத்து மக்களும் தன்னைத்தானே அறியும் காலம் இதுவேயாகும். திருமுறை யந்திர வழிபாட்டால் சமயம், மொழி, கலாச்சாரம், பண்பாடு மேலோங்கும். ஞானம் கிட்டும், யோகநிலை பெறும், சகோதர சகோதரித்துவம் பெருகும், நல்லிணக்கம் உண்டாகும்.

testi2

அறிவாற்றல் பெருகும், லட்சியம் சித்திக்கும், இடர் களையும், செல்வம் பெருகும், எண்ணியது நிறைவேறும், அமைதி கிட்டும், பிணி நீங்கும், திருமுறைகளை செப்பேட்டில் ஆவணப்படுத்துதல் வருங்கால சந்ததியினர் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சிறந்து விளங்கி, இயற்கை சீற்றங்களிலிருந்து விடுபட்டு ஞாலம் செழித்து ஓங்கிட திருமுறைத் திருக்கோயில் திருமுறை நாதர் திருவடி நிழலில் இணைவோமாக, உலகெலாம்.

testi1

இத்திருக்கோயிலானது

சைவ சமய உலகத்தில் சிறப்பாக என்றென்றும் விளங்கி அருள்பாலித்து வருகின்ற பெருமானுடைய தாமிர சபை வடிவில் திருமுறைக் கருவறை அமைக்கப்பட்டு கீழ்த்தளத்திலிருந்து கோபுரக்கலசம் வரை திருமுறை திருக்கோயில் முழுமையாக செப்புக் கவசம் இடுதல் வேண்டும். மூலவராக பன்னிரு திருமுறைகளையும் திருச்சன்னதியுள் செப்பேடுகளாக எழுந்தருளச் செய்து கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்.

செயல்கள்

திருமுறை செப்பேடு