சம்பந்தர் மேடு 2014 - Copper Temple
திருஆலவாயிலிருந்து சமணர்களை வென்று சோழ மண்டலத்துக்கு திருஞானசம்பந்தப்பெருமான் திருவாரூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வெள்ளம் பெரம்பூரில் எழுந்தருளி அப்பர் எங்குற்றார் என ஞானசம்மந்தப் பெருமான் வினவிய பொழுது அடியேன் இங்குற்றேன் என அப்பர் பெருமான் தோள் சுமந்த சம்பந்தர் மேடு என்று அழைக்கப்படும் திருத்தலத்தில் திருக்கோயில் அமைத்து திருஞானசம்பந்தப்பெருமான், திருநாவுக்கரசர் பெருமான் மூலவர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பெற்று திருஞானசம்பந்தப் பெருமானுக்கும். திருநாவுக்கரசர் பெருமானுக்கும் செப்புத் திருமேனி செய்யப் பெற்றும் இதனையும் திருவருளே முன்னின்று கும்பாபிஷேகம் 13.04.2014 அன்று விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடத்தப்பெற்றது, தோள்சுமந்த விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடை ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெறுகிறது
அழைப்பிதழ்கள்
அருள்திரு ஞானசம்பந்தயர் நாயனார் திருக்கோயில் பழைய தோற்றம்
தோள் சுமந்த திருவிழா